01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


அனுராதபுரத்திற்கு 5700 மில்லியன் ரூபா செலவில் பாலங்கள்

2019.03.26iv

அனுராதபுர மேற்குப் பிரிவில், 11 பாலங்களை நிர்மாணிக்கும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், காந்டை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் தலைமையில், நேற்று அடிக்கல்கள் நாட்டப்பட்டன.

 

கிராமிய பாலங்கள் நிர்மாணக் கருத் திட்டத்தின் கீழ், நொச்சியாகம ஓலுவெவ பாலம் நிர்மாணிக்கப்படும். இதன் நிமித்தம், 450 இலட்சம் ரூபா நிதி செலவிடப்படும். இந்தப் பாலத்தின் மூலமாக ஹம்மில்லக்குளம், நொச்சியாகம, அமுணுகொல இஹல கெட்டிதேக்குவ, ஜயகம மற்றும் நுவரகம ஆகிய கிராமவாசிகளுக்கு போக்குவரத்து வசதிகள் கிட்டும்.

இதற்கிடையில் சாலியபுர, பானியங்கடவள, பூவரசங்குளம் ஆகிய கிராமங்களுக்கும் செல்லும் வகையில், புரதான அரச காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கற் பாலத்திற்கு அருகில் புதிய ஒரு பாலமும் நிர்மாணிக்கப்படும். இதன் நிமித்தம் 700 இலட்சம் ரூபா நிதி செலவிடப்படும். இந்த நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், அட்டமஸ்தான அதிபதி அதி வணக்கத்திற்குரிய பல்லேகம சிறினிவாஷ தேரரும் கலந்துகொண்டார்கள்.

கிராமிய பாலங்கள் நிர்மாணக் கருத் திட்டத்தின் கீழ், சாலியபுர பஹலகம பாலம், எட்டாவது மைல் வீதிப் பாலம், அசோக்கபுர மூன்றாம் வாய்க்கால் பாலம் போன்ற பாலங்களின் நிர்மாணப் பணிகள் அமைச்சரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதற்கிடையில், பண்டாரபுளியங்குளத்தில் பயிர் செய்யப்படும் 100 ஏக்கர் வயல் காணிகளுக்கு செல்வதற்கான வீதிக்கும், நிசல மாவத்தை புதிய பாலத்திற்கும் அமைச்சரினால் அடிக்கல்கள் நாட்டப்பட்டன. 


Last Updated on Monday, 01 April 2019 07:42

Last Update

19-08-2019

Get Social

Ministry of Agriculture, Rural Economic Affairs Irrigation and Fisheries and Aquatic Resources Development

288,

Sri Jayawardenepura Mawatha,

Rajagiriya, Sri Lanka,

Tel: +94-11-2869553

Fax: +94-11-2868910

E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Copyright © 2019 The Ministry of Agriculture, Rural Economic Affairs , Irrigation 

and Fisheries and Aquaitc Resources Development

All Rights Reserved.

 Solution by: