01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


நெல் சந்தைப்படுத்தல் சபை 22,000 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்தது

2019.03.21ii

நெல் சந்தைப்படுத்தல் சபை ஏற்கெனவே 22,000 மெற்றிக் டொன் அளவான நெல்லை கொள்வனவு செய்துள்ளதாக கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள், அனுராதபுர மாவட்டத்தின் மானிங்கமுவ ஒயாமடுவ கார்பெட்டு இட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட வீதியை மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்ட வேளையில் இவ்வாறு கூறினார்கள்.

 மேலும், கருத்துத் தெரிவித்த அமைச்சர் ‘ஏற்கெனவே அம்பாறை மாவட்டத்தில் 5200 மெற்றிக் டொன் நெல்லும், அனுராதபுர மாவட்டத்தில் 2500 மெற்றிக் டொன் நெல்லும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2300 மெற்றிக் டொன் நெல்லும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2700 மெற்றிக் டொன் நெல்லும், வவுனியா மாவட்டத்தில் 2000 மெற்றிக் டொன் நெல்லும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1700 மெற்றிக் டொன் நெல்லும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2370 மெற்றிக் டொன் நெல்லும் என்ற அளவில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்துள்ளது’.

 நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்துள்ள ஆகக்கூடிய அளவு பதிவாகியிருப்பது அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியில், 393 மெற்றிக் டொன் அளவிலாகும். அதே போன்று, இரண்டாவது அளவாக அனுராதபுர மாவட்டத்தின் ரம்பாவ களஞ்சியசாலையினால் 437 மெற்றிக் டொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், இன்று அவர்களின் நெல்லை உலர்த்துவதற்கு உச்சாகம் குன்றியிருக்கின்றனர். நெல் சந்தைப்படுத்தும் சபை விவசாயிகளின் நெல்லுக்கு ஒரு உத்தரவாத விலையை பெற்றுக் கொடுத்துள்ளது. ஒரு கிலோ கிராம் சம்பா நெல்லை 41 ரூபா விலையிலும், மற்றும் ஒரு கிலோ கிராம் நாட்டு இன நெல்லை 38 ரூபா விலையிலும் கொள்வனவு செய்ய நாம் தயராகவுள்ளோம். இதன் நிமித்தம் நாம் 200 நெல் களஞ்சியசாலைகளை ஆரம்பித்துள்ளோம். எனினும், விவசாயிகள் அவர்களின் நெல்லை ஈரளிப்புடன் களங்களில் வைத்தே விற்பனை செய்கின்றனர். இதுதான் உண்மை’.

 நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்துள்ள ஆகக்குறைந்த அளவு பதிவாகியிருப்பது பொலன்னறுவை மாவட்டத்திலாகும் எனவும், அது 200 மெற்றிக் டொன் என்ற அளவுக்கு மட்டுப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்’. இதன் போது, இதற்கு காரணமாக, நெல் சந்தைப்படுத்தல் சபையின் பொது முகாமையாளர் சமன் பாலித்த பண்டார அவர்கள் குறிப்பிட்டது யாதெனில், அரிசி ஆலை உரிமையாளர்கள் தமது உத்தரவாத விலையை விஞ்சி ஒரு கிலோ நாட்டு இன நெல்லை 39 ரூபா விலையில் கொள்வனவு செய்வதற்கு அந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவாகும். 

கார்பெட்டு இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட 13 கிலோ மீற்றர் நீளமான மானிங்கமுவ, ஒயாமடுவ வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ‘ரன் மாவத்’ எனும் வீதி நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணையான அமைச்சர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இதன் நிமித்தம் 2725 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. 

 


Last Updated on Monday, 25 March 2019 06:15

Last Update

19-08-2019

Get Social

Ministry of Agriculture, Rural Economic Affairs Irrigation and Fisheries and Aquatic Resources Development

288,

Sri Jayawardenepura Mawatha,

Rajagiriya, Sri Lanka,

Tel: +94-11-2869553

Fax: +94-11-2868910

E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Copyright © 2019 The Ministry of Agriculture, Rural Economic Affairs , Irrigation 

and Fisheries and Aquaitc Resources Development

All Rights Reserved.

 Solution by: