01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


அனுராதபுர மாவட்டத்தில் சேனா என்ற புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கல்

2019.03.15

சேனா என்றழைக்கப்படும் புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் முதல் கட்டப் பணி அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அனுராதபுர மாவட்டத்தில் அவ்வாறு பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் வைபவம் இன்று (15) ஆம் திகதி கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் தலைமையில், அனுராதபுர மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இந்த வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் - இதற்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் சேனா என்ற புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டன. நாம்1600 இலட்சம் ரூபா அம்பாறை மாவட்டத்திற்கு நஷ்டஈடாக வழங்கினோம். இன்னும் நஷ்டஈடுகள் வழங்கப்படவுள்ளன. அதே போன்று, மொனராகல் மாவட்டம், அனுராதபுர மாவட்டம் போன்ற மாவட்டங்கள் அடங்கலாக வட மாகாணங்களின் சில மாவட்டங்களுக்கும் நஷ்டஈடுகள் வழங்கப்படவுள்ளன.  அதே போன்று குருனாகல் மாவட்டத்திலும் இந்த நஷ்டஈடுகள் வழங்கப்படவுள்ளன. சேனா என்ற இந்தப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களுக்கு விவசாய காப்புறுதி சபையினால் நஷ்டஈடுகளை வழங்குவதற்கு அந்த சபைக்கு சட்டபூர்வ உரிமை இருக்கவில்லை. பொதுவாக விவசாய காப்புறுதி சபை நெல் மற்றும் சோளம் அடங்கலாக மேலும் 7 பயிரினங்களுக்கு இயற்கை அழிவுகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் நஷ்டஈடுகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. வெள்ளப்பெருக்ககள் மற்றும் வரட்சிகள் என்பவற்றினால் பாதிக்கப்பட்டாலும் நஷ்டஈடுகளை வழங்குவதற்கு. எனினும், இந்த சேனா புழுவினால் பாதிப்புகள் ஏற்பட்ட ஆரம்பத்திலிருந்தே, நாடு முழுதிலும், எமது ஊடங்களினூடாக பெருமளவில் அது பற்றி பிரசாரப்படுத்தப்பட்டது. இந்த சேனா புழுவின் பாதிப்புகள் பற்றி கதைக்கும் போது எனக்கு ஞாபகம் வருகின்றது, இந்தப் பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில், ஒரு சிலர் சோளப் பயிர்ச் செய்கைக்கு முழுமையாக தீயிட்டு அழிக்குமாறு சொன்னார்கள். அந்த சேனா புழுவின் பாதிப்புகள் நெல் வேளாண்மைக்கும் வரும் என்று. நெல் பயிர்ச் செய்கையையும் தீயிட்டு அழிக்க வேண்டும் என்றும் சொன்னார். எமது மக்கள் விடுதலை முன்னணியின் சகோதர்கள் சொன்னார்கள் சிங்கராஜ வனத்திற்கும் இந்த சேனா புழு பரவியுள்ளது என்று. அப்படி என்றால், சிங்கராஜ வானத்திற்கும் தீ வைக்க நேரிடும்.

இந்த சேனா புழுவை பெரிதாகப் பிடித்துக் கொண்டு ஒரு சில அசியல்வாதிகள் துள்ளிப்பாய்ந்தார்கள். பாராளுமன்றத்தில் நான் கண்டேன், ஒரு சிலர் சேனா புழுவுக்கும் கம்பளிப் பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் கதைத்ததை. தற்பொழுது எமது எல்லாவற்றுக்கும் அரக்கராக இருக்கின்ற விமல் வீரவங்ச அவர்களின் உடல் முழுவதிலும் மூளை. அவர் பாராளுமன்றத்தில் என்னிடம் ஒரு கேள்வியை கேட்கின்றார். சேனா புழு இந்தியாவிலிருந்து எப்படி பறந்து வருகின்றது என்று. இந்த சேனா புழு ஒரு பூச்சி அல்லது, ஒரு புழு. கம்பளிப் பூச்சியையும் புழுவையும் விமல் வீரவங்ச அவர்களினால் இனங்காண முடியாமலுள்ளது. அவர்கள் பார்த்தார்கள், இந்தப் புழுவை மையமாக வைத்து அரசாங்கத்தை பிரச்சினையில் போட்டுவிடுவதற்கு. விடய அமைச்சர் என்பதால், என்னையும் பிடித்துக் கொண்டு, இந்தப் புழுவின் பாதிப்புகள் பற்றி பெரிதாக பேசினார்கள். இந்தப் பிரச்சினையின் போது ஊடகங்கள் பெருமளவில் எமக்கு பங்களித்தன. ஆகையால், நாம் சகல ஊடகங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

அதே போன்று, நான் விஷேடமாக நன்றியைத் தெரிவிக்க வேண்டும் சகல அரசாங்க அதிபர்களுக்கும். அவர்கள் தமது கள உத்தியோகத்தர்களுக்கு அறியப்படுத்தினார்கள். அதே போன்று, அரசாங்க ஊழியர்களின் உதவியும் உச்ச அளவில் கிடைத்தது. ஆகையால், எங்களால் முடிந்தது இந்த சேனா புழுவை குறுகிய காலத்திற்குள் அழிப்பதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கும்.

அதே போன்று ஜனாதிபதி அவர்களும், பிரதமரும், நிதி அமைச்சரும் நஷ்டஈடுகளை வழங்குவதற்கு தேவையான நிதிகளை ஒதுக்கித் தந்தனர். வரலாற்றில் இவ்வாறு அழிவுகள் ஏற்பட்ட நேரத்தில் ஒரு போதும் இவ்வாறு விரைவில் நஷ்டஈடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தம்புத்தேகமவில் 139 எக்கர் விவசாய நிலங்கள் சேனா புழுவினால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனுராதபுர மாவட்ட விவசாய அலுவலர் ஒரு அறிக்கையை தயாரித்திருக்கின்றார். எனினும், இறுதியாக தேடிப்பார்த்த போது, உண்மையில் பாதிக்கப்பட்டிருப்பது 38 ஏக்கர்கள் மட்டுமே. அதில் 101 ஏக்கர்கள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளன. இப்படி 

இன்னும் ஐந்து பேர்கள் இருந்தால், அனுராதபுர மாவட்டத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். அது தொடர்பில் உடடினயாக விசாரணை செய்ய வேண்டும். அரசாங்கத்தின் நிதியை முறையற்ற விதத்தில் தத்தமது வேண்டப்பட்டவர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் இது மாதிரியான முறைகேடாக செயல்பட கூடாது. அரசாங்க ஊழியர்கள் என்ற வகையில் நேர்மையாக இருக்க வேண்டும்’.

முழுமையாக பயிர்கள் அழிவுக்குள்ளகிய அனுராதபுர மாவட்டத்தின் 132 விவசாயிகளுக்கு இதன் போது நஷ்டஈடுகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் பயிர்ச் செய்கைக்கு அரசாங்கத்தினால் 40,000 ரூபா நஷ்டஈட்டை வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனுராதபுர மாவட்டத்தின் விவசாயிகளுக்கு அரசாங்கம் 540 இலட்சம் ரூபா பணத்தை செலவிடுகின்றது’.

இந்த நிகழ்வில் கமத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு கே.டீ.எஸ். ருவன்சந்திர, விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவர் திரு சுமித் வர்ணகுலசூரிய, விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் பணிப்பாளர் நாயகம் திரு பண்டுக்க வீரசிங்க ஆகியோர் அடங்கலாக பலரும் கலந்துகொண்டனர்.


 


Last Updated on Tuesday, 19 March 2019 09:41

Last Update

15-07-2019

Get Social

Ministry of Agriculture, Livestock Development, Irrigation and Fisheries and Aquatic Resources Development

288,

Sri Jayawardenepura Mawatha,

Rajagiriya, Sri Lanka,

Tel: +94-11-2869553

Fax: +94-11-2868910

E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Copyright © 2019 The Ministry of Agriculture, livestock Development, Irrigation 

and Fisheries and Aquaitc Resources Development

All Rights Reserved.

 Solution by: