01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


நெற் சந்தைப்படுத்தல் சபை 10,000 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்யும்

2019.03.12i

 

சேனா என்றழைக்கப்படும் புழுவின் அழிவுகளினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏதாவது ஒரு காரணத்தினால் நஷ்டஈடுகள் கிடையாமல், அநீதி நிகழ்ந்திருந்தால், அவர்களால் மேன்முறையீடுகளை செய்ய முடியும் என கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள், மகாவலி கால்நடைகள் தொழில்முயற்சியாளர்களின் சங்கத்தினதும் வரையறுக்கப்பட்ட கோழிகள் வளர்ப்பு அபிவிருத்தி சங்கத்தினதும் பணிப்பாளர்கள் சபைகளின் புதிய அதிகாரிகளுக்கு நியமனங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்ட வேளையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 இதன் போது, மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் - சேனா என்றழைக்கப்படும் இந்தப் புழுவினால் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பது அம்பாறை மாவட்டம். அதே போன்று, மொனராகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதே போன்று, ஏனைய மாவட்டங்களிலும் சிறிதளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. சேனா என்றழைக்கப்படும் புழுவினால் பாதிப்பு ஏற்பட்டது இந்தத் தடவைதான். இலங்கையின் வரலாற்றில் இந்த ஆண்டு அதிகளவில் எமக்கு சோள அறுவடை கிடைத்துள்ளது. இது சராசரியாக 3 இலட்சம் மெற்றிக் டொன் அளவாகும். நாங்கள் கணக்குப் பார்த்த விதத்தில். நான் நினைக்கின்றேன் மிகவும் வெற்றிகரமான விளைச்சல் எமக்கு கிடைத்திருக்கின்றது என்று’.

சேனா புழுவின் அழிவு மிகவும் குறைந்தளவில்தான் இருந்தது. சராசரியாக பார்க்கும் போது அது 10% வீதத்திற்கு குறைந்தளவான பாதிப்பைத்தான் நாங்கள் பல இடங்களிலும் அவதானித்தோம். சில இடங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. அரைவாசிக்கு பாதிக்கப்பட்ட இடங்களும் இருந்தன. சில இடங்களில் சோளத்தின் இலைகள் மாத்திரம் பாதிக்கபட்டிருந்தாலும், கதிர்க்கு பாதிப்பு ஏற்படாததால், எமக்கு அதிகளவில் சோள அறுவடை கிடைத்தது.

சேனா என்றழைக்கப்படும் புழுவை இல்லாதொழிப்பதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கும் மிகவும் முக்கிய கரும பணி நிறைவேற்ற முடிந்தது எமது நாட்டிலுள்ள ஊடக நிறுவனங்கள் எமக்கு அளித்த பங்களிப்பினாலாகும். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களும் மற்றும் ஏனைய ஊடக நிறுவனங்களும் என பல ஊடகங்கள் எமக்கு உதவின. இந்த ஊடகங்கள் வழங்கிய பிரசார நடவடிக்கைகளினால் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதே போன்று மேன்மை தங்கிய ஜனாதியும் நல்கிய பங்களிப்பு மதிக்கத்தக்கதாகும். ஜனாதிபதி அவர்கள் கமத்தொழில் அமைச்சை மையமாகக் கொண்டு, இது தொடர்பான ஒரு சிறப்புச் செயலணியை தாபித்தார். பிரதமர் அவர்களும் நாளுக்கு நாள் இது பற்றிய அறிக்கைகளை கோரினார்கள். சேனா என்றழைக்கப்படும் இந்த புழுவை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை நடவடிக்கை எடுத்தது போலவே, அந்தப் புழுவினால் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பிலும் நஷ்டஈடுகளை வழங்குவதற்கும் தேவையான நிதிகளை பெற்றுத் தந்தது. ஆகையால், எமக்கு இது தொடர்பில், அரச துறை நிறுவனங்கள் போன்று, தனியார் விவசாய விஞ்ஞானிகளும், உள்நாட்டு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு அதிகளவில் பங்களித்திருந்தனர். சேனா புழுவினால் ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்கு. இந்த சகல ஊடக நிறுவனங்களுக்கும் நாம் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதன் போது அமைச்சர், நெல்லைக் கொள்வனவு செய்யும் விடயங்கள் பற்றியும் கருத்துத் தெரிவித்தார். நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு இந்தத் தடவை நேரடியாக நிதி வழங்கப்படுவதில்லை. அரசாங்க அதிபர்களுக்குத்தான் நிதி அனுப்பப்படுவது. ஏற்கெனவே, இலங்கையில் சகல அரசாங்க அதிபர்களுக்கும் நிதி அனுப்பப்பட்டுள்ளது. அனுராபுரத்திலுள்ள சகல களஞ்சிய நிலையங்களும் திறந்துள்ளன. இலங்கையில் 210 களஞ்சிய நிலையங்கள் நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு இருக்கின்றன.அந்த சகல களஞ்சிய நிலையங்களும் திறந்துள்ளன. எவருக்காவது, நெல் களஞ்சிய நிலையம் தொடர்பில் தூரம் என்ற பிரச்சினை ஏதுமிருக்குமாயின், நாங்கள் அருகிலுள்ள தனியார் துறையினரின் ஒரு நெல் களஞ்சிய நிலையத்தை வாடகைக்கு பெற்று, உத்தியோகத்தர்களை அங்கு அனுப்பி, நெல்லைக் கொள்வனவு செய்வோம். அனுராதபுர மாவட்டத்தின் அரசாங்க அதிபருக்கு 

தேவையான அளவு நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி தேவையாயின், நிதியை பெற்றுக் கொடுக்கலாம். அமைச்சரவை, இது தொடர்பில் 5000 மில்லியன் ரூபா நிதியை பெற்றுத் தந்துள்ளது. அந்த நிதியேற்பாடும் போதாது என்றால், மேலும் நிதிகளை பெற்றுத் தருவதாக பிரதமர் கூறியிருக்கின்றார். தற்பொழுது, நெல் சந்தைப்படுத்தல் சபை  10,000 மெற்றிக் டொன் அளவான நெல்லை கொள்வனவு செய்துள்ளது. இதில், அதிகளவு கொள்வனவு செய்யப்பட்டிருப்பது வட மாகாணத்திலிருந்து.  

விவசாயிகளுக்கு நான் கூறுவது, தயவுசெய்து 14% ஈரப்பதனில் இருக்கக் கூடிய வகையில், நெல்லை உலர்த்தி, நெற் சந்தைப்படுத்தல் களஞ்சிய நிலையங்களுக்கு கொண்டுவந்து தருமாறு. எதாவது ஒரு நெல் களஞ்சிய நிலையத்தில் நெல் கொள்வனவு செய்யப்படுவதில்லை என்று கூறினால், நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவருக்கு அல்லது எனக்கு கதைத்து சொல்ல முடியும். அவ்வாறிருந்தால், அது தொடர்பில் தலையிட்டு இதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க முடியும். விவசாயிகள் முன்னர் என்றால் நெல்லை அறுவடை செய்து 3 நாட்கள் வயலில் உலர வைப்பார்கள். அதன் பின்னர்தான், அறுவடை செய்யப்பட்ட அந்த நெற் கன்றுகளை கட்டுக் கட்டுகளாகக் கட்டி, களத்திற்கு கொண்டு சென்று, களத்தில் வைத்து, நெற் கதிர்களை அடித்து நெல் மணிகளாக பிரித்தெடுப்பார்கள். அதன் போது, இந்த ஈரப்பதன் மிகவும் குறைந்தளவில் இருக்கும்’.

ஆனால், இன்று அந்த நிலை மாறியுள்ளது. இயந்திரங்களினால் அறுவடை செய்து, சாக்குகளில் இட்டு, அதே நேரத்தில் கொண்டுவருவது. இந்த நெல் இருப்புகளை நாம் களஞ்சியப்படுத்த வேண்டும். சில நேரங்களில் 6 மாதங்கள், ஒரு வருடம் என காலம் செல்லலாம். இந்த ஈரதப்பதனில் நெல் புஞ்சனம்பூர்த்து பழுதடையும். மக்களின் பணம் வீணாகினாலும், அந்த குற்றச்சாட்டுகளும் எங்கள் மீதே போடப்படுகின்றன. நெல்லை சரியான அளவில் உலர்த்திக் கொள்ளுங்கள். இந்த நெல்லை இன்று கொள்வனவு செய்து, நாளை அரிசியாக்குவதில்லை. எமக்கு இந்த நெல் இருப்புக்களை நீண்டகாலம் வைத்திருக்க வேண்டியுள்ளது. எனினும், அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று நெல்லை கொள்வனவு செய்து, நாளை அதனை அவித்து

அரிசியாக்குகின்றார்கள். ஆகையால், அவர்களுக்கு, ஈர நெல்லை கொள்வனவு செய்வதால் பிரச்சினையில்லை’.

விவசாயிகள் வாழுகின்ற ஒரு பிரதேசத்தில் பிறந்தவன் என்ற ரீதியில், நான் கூறுவது, நெல்லின் விலை அதிகரிக்க வேண்டும் என்று. ஏன், பல போகங்களாக நெல்லின் விலை அதிகரிக்கப்படவில்லை. காரணம், எமக்கு இது தொடர்பில் சரியான ஒரு முறையியல் இருக்கவில்லை. அதிக விலையில் நெல்லை கொள்வனவு செய்தால், அரிசி உரிமையாளர்கள் கூறுகின்றார்கள், அரிசியின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று. அப்போது, நுகர்வோருக்கு அதிகளவு பணத்தை செலவிடுவதற்கு நேரிடும். இதற்கு, நாம் ஒரு முறையியலை தயாரித்திருக்கின்றோம். ஒரு கிலோ கிராம் நெல்லை 38 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு. அத்துடன் ஒரு கிலோ கிராம் அரிசியை 80 ரூபா விலையில் கொள்வனவு செய்வதற்கு. நாம், வர்த்தகத் தரப்புகள், விவசாயிகள் மற்றும் எமது ஆராய்ச்சிப் பிரிவுகள் போன்ற சகல தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னர்தான் நாம் இந்த முறையியலை தயாரித்தோம். எப்போதும், நெல்லின் விலை அதிகரிக்கும் போது 2.1 என்ற அளவில் அரிசியின் விலையையும் அதிகரிக்க வேண்டும்’.

அடுத்த பயிர்ச் செய்கைப் போகத்திலிருந்து சரி, நெல்லின் விலையை அதிகரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் . இந்த முறையியலை பின்பற்றினால், போகத்திற்கு போகம், அல்லது வருடத்திற்கு வருடம் நெல்லின் விலையை அதிகரிக்க முடியும். அதனால், விவசாயிக்கும் நன்மை கிடைக்கும். அதே போன்று, இந்த நன்மை நுகர்வோருக்கும் கிடைக்கும். பல வருடங்கள் கதைத்தாலும் சரியான ஒரு முறையியலை தயாரித்துக் கொள்ள முடியவில்லை. என்றாலும், இந்தத் தடவை, கமக்காரர் அமைப்புகள், அரிசி ஆலை உரிமையாளர்கள், வர்த்தகத் தரப்புகள் முதலிய சகல தரப்புகளுடனும் பல நாட்களாக கலந்துரையாடித்தான் இந்த முறையியலை தயாரித்தோம். ஆகையால், எதிர்காலத்தில், விவசாயிகளுக்கு பிரச்சினை இருக்காது’.

 


 


Last Updated on Monday, 18 March 2019 05:13

Last Update

16-10-2019

Get Social

Ministry of Agriculture, Rural Economic Affairs Irrigation and Fisheries and Aquatic Resources Development

288,

Sri Jayawardenepura Mawatha,

Rajagiriya, Sri Lanka,

Tel: +94-11-2869553

Fax: +94-11-2868910

E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Copyright © 2019 The Ministry of Agriculture, Rural Economic Affairs , Irrigation 

and Fisheries and Aquaitc Resources Development

All Rights Reserved.

 Solution by: